இராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "மேற்கு இராக்கிலுள்ள அன்பர் மாகாணத்திலுள்ள கஃபே ஒன்றில் தீவிரவாதிகள் இன்று (வியாழக்கிழமை) நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இரக்கில் மேற்கு பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.