உலகம்

நேபாள வெள்ளத்தில் 100 பேர் உயிரிழப்பு: கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேர் மீட்பு?

100 இந்தியர்கள் உட்பட 350-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

செய்திப்பிரிவு

காத்மாண்டு: நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் 100 பேர் உயி​ரிந்​துள்​ளனர். மேலும், 350-க்​கும் மேற்​பட்​டோரைத் தேடி வரு​கின்​ற​னர். கும்​பகோணத்​தில் இருந்து சுற்​றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்​பிய​தாக​வும், மற்ற 37 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​ட​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​கள் உடைப்பு காரண​மாக கோசி, திரிசூலி நதி​களில் வரலாறு காணாத வகை​யில் நேற்று வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

மலைச்​சரி​வு​களில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்​ளநீர் கிரா​மங்​கள், பாலங்​கள் மற்​றும் முக்​கிய நீர்​மின் திட்​டங்​களை அடித்​துச் சென்று பேரழிவை ஏற்​படுத்​தி​யது. ஆற்​றுப் படு​கையை ஒட்​டி​யுள்ள அடுக்​கு​மாடிக் கட்​டடங்​கள் நொடிப் பொழு​தில் வெள்​ளத்​தில் சரிந்து விழுந்​தன. பெரும் பாலங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. இதுதொடர்​பான ஏராள​மான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

வெள்​ளத்​தில் சிக்கி இது​வரை 100 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் காணா​மல் போன 350-க்​கும் மேற்​பட்​ட​வர்​களை தேடி வரு​வ​தாக முதற்​கட்ட தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. மேலும், இந்த வெள்​ளத்​தில் 9 பாது​காப்​புப் படை​யினர் மற்​றும் 60 நீர்​மின் நிலைய தொழி​லா​ளர்​கள் காணா​மல் போயுள்​ளனர்.

நேபாள சுற்​றுலா வாரி​யத்​தின்​படி, 291 வெளி​நாட்​ட​வர்​கள் (105 இந்​தி​யர்​கள் உட்​பட) மற்​றும் 93 நேபாளி​கள் என மொத்​தம் 384 பயணி​கள் காணா​மல் போயுள்​ள​தாக தகவல் தெரிவிக்​கின்​றன.

ராசு​வாக​தி, சிலிமே, திரிசூலி நீர்​மின் நிலை​யங்​கள் உட்பட 6 முக்​கிய மின் உற்​பத்தி மற்​றும் பரி​மாற்ற நிலை​யங்​கள் வெள்​ளத்​தில் சேதமடைந்​த​தால் நேபாளத்​தில் மின் விநி​யோகம் முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடை​யில், நிலநடுக்​கத்​தால் பனிச்​சரிவு ஏற்​பட்​டதே பெரு​வெள்​ளத்​துக்​குக் காரணம் என்று நேபாள வெளி​யுறவுத் துறை அமைச்​சர் சிஷிர் கனால் நேற்று தெரி​வித்​தார்.

பிரதமர் மோடி உறுதி

நேபாள பிரதமர் பாலேந்​திர ஷாவிடம் தொலைபேசி​யில் பேசிய இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, உயி​ரிழந்​தோர் குடும்​பங்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்து கொண்​டார். அத்​துடன், தேவை​யான அனைத்து மனி​தாபி​மான மற்​றும் மீட்பு உதவி​களை​யும் இந்​தியா வழங்​கும் என உறுதி அளித்​துள்​ளார்.

அதன்​படி, நேபாளத்​தில் நிவாரணப் பணி​களில் ஈடுபட இந்​திய விமானப் படை​யின் சி-17 மற்​றும் சி-130 விமானங்​கள் நிவாரணப் பொருட்​கள், மருந்​துகள் மற்​றும் மண் தோண்​டும் இயந்​திரங்​களு​டன் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அவை விரை​வில் நேபாளத்​துக்கு சென்று மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களில் ஈடு​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அத்​துடன், நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் உள்ள இந்​தி​யத் தூதரகம் அவசர தொலைபேசி எண்​களை அறி​வித்​துள்​ளது. தொலைபேசி / வாட்​ஸ்​அப்: +977 985 131 6807 | +977 970 910 7500 ஆகிய எண்​களைத் தொடர்பு கொண்டு விவரங்​கள், உதவி​கள் பெறலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடை​யில், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை உள்​ளிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த 57 பேர், கும்​பகோணத்​தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்​திரைக்​குச் சென்​றனர். அவர்​கள் வெள்​ளத்​தில் சிக்​கி​யுள்​ளனர். அவர்​களைக் கும்​பகோணத்​தைச் சேர்ந்த சூப்​பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறு​வனம் அழைத்​துச் சென்​றுள்​ளது.

இவர்​கள் நேற்று காத்​மாண்டு பகு​தி​யில் 3 வாக​னங்​களில் சென்று கொண்​டிருந்​தனர். அப்​போது அப்​பகு​தி​யில் திடீரென பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதில் ஒரு வாக​னத்​தில் சென்ற 20 பேர் தப்பி பத்​திர​மாக உள்​ள​தாக​வும், மற்ற 2 வாக​னங்​களில் சென்ற 37 பேர் வெள்​ளத்​தால் ஏற்​பட்ட நிலச்​சரி​வில் சிக்​கி, பின்​னர் மீட்​கப்​பட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து சூப்​பர் யாத்ரா டிராவல்ஸ் உரிமை​யாளர் செய்​யது சாதிக் (76) கூறிய​தாவது:

கடந்த 23-ம் தேதி இரவு கைலாய மலைக்​குக் கும்​பகோணத்​தில் இருந்து 57 பயணி​களு​டன் புறப்​பட்​டோம். பின்​னர் காத்​மாண்​டு​வில் இறங்கி கைலாய மலைக்கு அவர்​களை 3 வாக​னங்​களில் அனுப்பி வைத்​துவிட்டு நான் திரும்பி விட்​டேன். எனது மகன் உமர் பாரூக் (30) அவர்​களு​டன் வழி​காட்​டி​யாகச் சென்​றார்.

பின்​னர், இன்று (நேற்​று) காலை எங்​களது குழு​வில் சென்ற ரகு என்​பவர் எனக்கு போன் செய்​து, திடீர் வெள்​ளத்​தில் ஒரு வாக​னத்​தில் சென்ற 20 பேர் தப்​பித்து பத்​திர​மாக உள்​ள​தாக​வும், 37 பேருடன் சென்ற 2 வாக​னங்​கள் பள்​ளத்​தில் விழுந்​ததை பார்த்​த​தாக​வும் கூறி​னார்.

பின்​னர், அந்த 37 பேரும் தங்​களது உடைமை​களை இழந்து ராணுவ முகாமில் இருப்​ப​தாக குழு​வில் சென்ற சிவரஞ்​சனி என்​பவர் காலை 10 மணி​யள​வில் எனக்கு தகவல் தெரி​வித்​தார். அந்​தப் பகு​தி​யில் தொலை​தொடர்பு வசதி இல்​லாத​தால் அதன்​பின் அவர்​கள் யாரை​யும் தொடர்பு கொள்ள முடிய​வில்​லை. அவர்​களாகத் தொடர்பு கொண்​டால் மட்​டுமே பேச முடி​யும். அனை​வ​ரும் பத்​திர​மாக ஊர் வந்து சேரு​வார்​கள் என நம்​பிக்​கை​யுடன் காத்​திருக்​கிறேன். இவ்​வாறு செய்​யது சாதிக் கூறி​னார்.

நேபாள வெள்​ளத்​தில் சென்னை உயர் நீதி​மன்ற ஓய்வு பெற்ற நீதிப​தி​யான மயி​லாடு​துறையைச் சேர்ந்த வி.சிவ​ஞான​மும் சிக்​கி​யிருப்​ப​தாக​வும், அவர் உள்​ளிட்ட வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களைப் பாது​காப்​பாக மீட்க மீட்புப் படை​யினர் நடவடிக்​கை​களைத் துரிதப்​படுத்​தி​யுள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளது.

SCROLL FOR NEXT