உலகம்

ஈரான் சிறைபிடித்த 10 இந்திய மாலுமிகள் பல மாதங்களுக்கு பிறகு விடுதலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈரானின் ஜாஸ்க் துறை​முகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்​.​வி.ஹார்​பர் பீனிக்ஸ் என்ற எண்​ணெய் கப்பலை ஈரான் கடற்​படை தடுத்து நிறுத்​தி​யது.

இதையடுத்து அதில் இருந்த இந்​திய மாலுமிகள் 10 பேர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் தொடர்ச்​சி​யான தூதரக முயற்​சிகள் காரண​மாக இந்​திய மாலுமிகள் 10 பேரும் விடு​தலை செய்​யப்​பட்​டுள்​ள​தாக கப்​பல் போக்​கு​வரத்து இயக்​குநரகம் அறி​வித்​துள்​ளது.

இது குறித்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில், “ஈரா​னால் விடுவிக்​கப்​பட்ட இந்​திய மாலுமிகள் தற்​போது பத்​திர​மாக உள்ளனர். அவர்​கள் மிக விரை​வில் இந்​தியா திரும்​புவதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன” என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது.

இந்​தியா- ஈரான் இடையே தூதரக மற்​றும் எரிசக்தி உறவு​கள் நீண்ட கால​மாக உள்​ளன, அதே வேளை​யில் அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலுட​னான தனது நெருங்கிய உறவு​களை​யும் இந்​தியா சமநிலை​யில் கையாண்டு வரு​கிறது. வளை​குடா பகு​தி​யில் சட்டவிரோத​மாக எரிபொருளைக் கடத்​தும் கப்​பல்​களை தடுத்து நிறுத்தி வரு​வதாக ஈரான் படைகள் அறி​வித்து வரு​கிறது.

இந்​திய மாலுமிகளை விடு​விப்​ப​தற்​கான பேச்​சு​வார்த்​தை​யில் அமை​தி​யான தூதரக அணுகு​முறை மற்​றும் பொதுக் கருத்துகளை மிகக் குறைந்த அளவில் மட்​டுமே தெரிவிக்​கும் கொள்​கையை இந்​தியா பின்​பற்​றியது. இந்​திய மாலுமிகள் கைது செய்யப்​பட்​டதற்​கான காரணம் அல்​லது அந்த எண்​ணெய் கப்​பல் குறித்து கூடு​தல் விவரம் எது​வும் வழங்​கப்​பட​வில்​லை.

கப்​பல் போக்​கு​வரத்தை கண்​காணிக்​கும் இணை​ய தளங்​கள், இந்த கப்​பலை பலாவு நாட்​டு கப்​பல் என்று பட்​டியலிட்​டுள்​ளன. உலகின் மிகப்​பெரிய வர்த்தக கப்​பல் பணி​யாளர்​களை கொண்ட நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்​றாகும். வளை​குடா கப்​பல் போக்​கு​வரத்​துப் பாதைகளில் ஆயிரக்​கணக்​கான இந்​திய மாலுமிகள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT