இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா”வை இயக்கியவர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே. இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 1870-ல் பிறந்தார். 1913-ல் “ராஜா ஹரிச்சந்திரா” திரைப்படத்தை எழுதி, இயக்கினார்.
இத்திரைப்படத்தில் ஆண்கள் நடிக்க முன்வந்தனர். ஆனால், அந்த காலத்தில் பெண்கள் நடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. சற்றும் தளராத பால்கே ஆண்களையே பெண் வேடத்திற்கு பயன்படுத்தினார். பெண் வேடத்தில் நடிக்கும் ஆண்களின் நடிப்பு இயல்பாக இருக்க எல்லா நேரமும் அதே உடையில் இருக்கச் சொன்னார்.
“மோஹினி பத்மாசுர்” உள்ளிட்ட பல திரைப்படங்களை உருவாக்கினார். இத்தனை பெருமைக்குரிய பால்கே 1944 பிப்ரவரி 16-ம்தேதி காலமானார். அதன் பிறகு இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு இந்திய அரசு 1969 முதல் ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கத் தொடங்கியது.
இந்திய திரைத்துறையின் 75-வது ஆண்டு 1989-ல்கொண்டாடப்பட்டது. அப்போது தாதா சாகேப் பால்கேவின் “ராஜா ஹரிச்சந்திரா” படத்தின் பெயரில் இந்திய அரசு தபால்தலை வெளியிட்டது.