இன்று என்ன நாள்

ஜன.18: இன்று என்ன? - ராவ் பகதூர் எம்.ஜி.ரானடே

செய்திப்பிரிவு

சமூக சீர்திருத்தவாதி, நீதிபதி, எழுத்தாளர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் 1842 ஜனவரி 18-ல் பிறந்தார் மகாதேவ் கோவிந்த் ரானடே (எம்.ஜி.ரானடே). கோலாப்பூரில் உள்ள மராத்தி பள்ளியில் படித்தார். 1862-ல் மும்பையின் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பிறகு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சட்டம் பயின்றார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவர் இவர்.

மேலும் பம்பாய் சட்டமன்றக் குழுவின் உறுப்பினராகவும், மகாராஷ்டிராவின் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணிபுரிந்தார். இவரது சமூக சீர்திருத்த அணுகுமுறை ஆங்கிலேயர்களை ஈர்த்தது. பிரார்த்தனை சமாஜத்தை நிறுவ உதவினார். சமூக மற்றும் மத சீர்திருத்த சித்தாந்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்து பிரகாஷ் என்ற மும்பை ஆங்கிலோ-மராத்தி நாளிதழின் ஆசிரியராக செயலாற்றினார்.

1861-ல் விதவை மறுமணம் சங்கத்தை ஈஷ்வர சந்திர வித்யாசாகருடன் இணைந்து நிறுவினார். பின்னாளில் இவருக்கு ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது. இவருக்கு மும்பையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே தனது மனைவி ரமாபாய் உயர்கல்வி பெற உதவினார். ரானடே மேற்கொண்ட சமூக மற்றும் கல்வி சீர்திருத்தப் பணிகளை அவரது மறைவுக்குப் பின்னர் ரமாபாய் தொடர்ந்தார்.

SCROLL FOR NEXT