இன்று என்ன நாள்

ஜன. 11: இன்று என்ன? - குழந்தை மீட்பர் கைலாஷ் சத்யார்த்தி

செய்திப்பிரிவு

குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் கைலாஷ் சத்யார்த்தி.

1954 ஜனவரி 11-ம் தேதி மத்திய பிரதேசத்தில் பிறந்தார். குழந்தைகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை கடத்தலுக்கு எதிராக போராடியதற்காக 2014-ல் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பச்சன் பச்சாவோ ஆந்தோலன் என்ற குழந்தை பாதுகாப்பு அமைப்பை தொடங்கினார். குழந்தைகளை தொழிலாளர்களாகவும் கொத்தடிமைகளாகவும் ஆட்டிப்படைப்பவர்களை அம்பலப்படுத்தினார். 17 கோடி குழந்தை தொழிலாளிகள் பள்ளிக்கு செல்லவில்லை எனில் கல்வி இலக்கை நாம் ஒரு நாளும் அடைய முடியாது, பிஞ்சு கை நம்முடைய சுகாதார இலக்குகளையும் நம் நாடு இழந்துவிடும் என்றார்.

கடந்த 30 ஆண்டுகளில் 86,000 குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளார். அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மெனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இவருக்கு கௌரவம் அளிக்கப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளுக்கென்றே அர்ப்பணித்து மனிதநேயமிக்க மனிதராக இன்றும் வாழ்ந்து வருகிறார் கைலாஷ் சத்யார்த்தி.

SCROLL FOR NEXT