இன்று என்ன நாள்

டிச.23: இன்று என்ன? - பிரதமர் சரண் சிங்

செய்திப்பிரிவு

நாட்டின் ஏழாவது பிரதமர், உத்தரப்பிரதேசம் மீரட் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் கிராமத்தில் 1902 டிசம்பர் 23-ல் பிறந்தவர் சௌத்ரி சரண் சிங். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் 1926-ல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.

1928-ல் சிவில் வழக்கறிஞரானார். விடுதலை போராட்டத்தில் தன்னை பிணைத்துக் கொண்டதன் மூலம் அரசியலில் நுழைந்தார். 1930-ல் உப்பு சட்டங்களை மீறியதற்காக 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1967-ல்முதன்முறையாக உத்தரப்பிரதேச முதல்வரானார். 1979-ல்இந்தியாவின் பிரதமர் ஆனார்.

அவரது நினைவைப் போற்றும் விதமாக லக்னோவில் உள்ள அமௌசி விமான நிலையத்திற்கு சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம், மீரட் பல்கலைக்கழகத்திற்கு சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT