‘கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்’ என்றவர். தீண்டாமை ஒழிக்கப் போராடியவர். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்றவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்ட துறைகளில் தேர்ந்தவர்.
ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். மகாராஷ்டிரா அம்பாவாதே கிராமத்தில் 1891 ஏப்ரல் 14-ல் பிறந்தார் அம்பேத்கர். ‘நவ பெளத்தம்' என்ற பெயரில் 2 லட்சத்துக்கும் அதிகமான பட்டியலின மக்களை பெளத்த சமயத்தைத் தழுவச் செய்தார்.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வடிமைப்புக்கும் வரைவு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார். சமூக நீதிப் போராளி முனைவர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6 அன்று காலமானார். மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990-ல் வழங்கப்பட்டது.