இன்று என்ன நாள்

நவ.23: இன்று என்ன? - உவமை கவிஞர் சுரதா

செய்திப்பிரிவு

கவிஞர் திலகம், தன்மானக் கவிஞர், கலைமாமணி, கவிமன்னர் என அழைக்கப்படுபவர் ராசகோபாலன். இவர் தஞ்சை மாவட்டம், பழையனூரில் 1921-ல் நவம்பர் 23-ம் தேதி பிறந்தார். சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்களை கற்று தேர்ந்தார். பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் தன் பெயரை சுப்புரத்தினதாசன் ஆக மாற்றினார். சுப்புரத்தினதாசனை சுருக்கி சுரதா என மாற்றிக் கொண்டார்.

1944-ல் மங்கையர்கரசி திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இவரது ‘தேன்மழை’ கவிதை நூலுக்கு தமிழக அரசு 1969-ல் விருது வழங்கியது. 1972-ல் கலைமாமணி விருது பெற்றார். திருச்சி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. “இரட்டை கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்ற இவரது கவிதை வரிகள் மிகவும் புகழ்பெற்றது.

SCROLL FOR NEXT