ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நில உரிமையாளர்களிடமும் பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர். தற்போதைய பிஹார், ஜார்காண்டைச் சேர்ந்த பழங்குடியினரின் விடுதலைக்காக முதன்முதலில் கிளர்ந்தெழுந்த இளம் போராளி பிர்சா முண்டா, 1875 நவம்பர் 15-ல் பிறந்தார்.
பழங்குடி தலைவர்களிலேயே இவருடைய உருவ சிலை தான் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலை., ஜார்க்கண்டில் பிர்சா முண்டா விமான நிலையம், பிர்சா தொழில்நுட்ப மையம், பிர்சா முண்டா தடகள விளையாட்டரங்கம் உள்ளிட்டவை இவரின் நினைவாக நிறுவப்பட்டுள்ளன. “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்று போராடிய பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடியினர் விடுதலை போராளிகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.