ஜெர்மனியை சேர்ந்த வில்லியம் ராண்ட்ஜன், எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்ததற்காக இயற்பியலில் நோபல் பரிசு பெற்றார். மருத்துவத் துறையில் பெரும் புரட்சியினை ஏற்படுத்தியது அவர் கண்டுபிடித்த கதிர்கள் தான். அவரது பங்களிப்பினைப் போற்றும் வகையில் அணு எண் 111 கொண்ட தனிமத்திற்கு ராண்ட்ஜனியம் என பெயரிடப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் மருத்துவ படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கதிரியல் நாள் கொண்டாடப்படுகிறது. எக்ஸ் - கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட 1895-ல்நவம்பர் 8-ம் தேதி சர்வதேச கதிரியல் நாளாக கொண்டாடப்படுகிறது. கதிரியலுக்கான ஐரோப்பிய கழகம் மற்றும் கதிரியலுக்கான அமெரிக்க கல்லூரி இணைந்து 2012-ம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தின.