இன்று என்ன நாள்

நவ.04: இன்று என்ன? - கணினியை மிஞ்சிய பெண்

செய்திப்பிரிவு

அதிவேகமாக கணக்கிடும் ஆற்றலும் நினைவாற்றலும் உடையவர் என்பதை மைசூர் பல்கலையில் ஆறு வயதிலேயே நிரூபித்தவர். அதே திறமையை தன்னுடைய எட்டு வயதில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் செய்து காட்டி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். கணிதத்திறன் நிறைந்தவர், வேகக் கணினி போன்ற அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர். அவர்தான் சகுந்தலா தேவி. ஆனால் இவர் கணிதவியலாளர் அல்ல. ஏனென்றால் இவர் கணிதத்தில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளவில்லை. எண்களின் கன மூலத்தை கணக்கிடுவதில் கணினியை விட வேகமாக செயல்படுவார். கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் ஆர்தர் 9 இலக்க எண்ணின் 7வது மூலம் கேட்டுவிட்டு தனது நோட்டில் கேள்வியை குறிப்பதற்குள் சகுந்தலா பதிலை சொல்லிவிட்டார். அத்தகைய சகுந்தலா தேவியின் பிறந்தநாள் இன்று.

SCROLL FOR NEXT