இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்த மூன்றாவது முகலாய பேரரசர் அக்பர். 1556 -1605வரை ஆட்சி செய்த அக்பர் முஸ்லிம் அல்லாத மக்களை ஆதரித்து அவர்கள் மீது இருந்த ஜிஸ்யா வரியை நீக்கினார். இலக்கியம் மீதான பேரார்வத்தால் அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கலைஞர்கள், அழகிய கையெழுத்தில் எழுதுபவர்களை கொண்டு சமஸ்கிருதம், உருது, பாரசீகம், கிரேக்கம், லத்தின், அரபு, காஷ்மீரியம் மொழிகளில் 24,000 நூல்கள் கொண்டுவந்தார். மகளிருக்கான பிரத்தியேக நூலகத்தை பதேபூர் சிக்ரியில் நிறுவினார். முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களின் கல்விக்காக தனது ராஜ்யம் முழுவதும் பள்ளிகள் நிறுவ ஆணையிட்டார். புத்தகப் பிணைப்பானது ஒரு உயர் மதிப்புடைய கலையாக உருவாக ஆதரவளித்த அக்பர் 1605-ல் அக்டோபர் 27-ம் தேதி காலமானார்.