இன்று என்ன நாள்

அக்.21: இன்று என்ன? - தேசிய காவலர் தினம்

செய்திப்பிரிவு

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1861-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டத்தின் கீழ் இந்திய காவல் பணி தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய காவல் பணி இந்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையத்துடன் இணைக்கப்பட்டது.

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இந்திய எல்லையான லடாக்கில் நிகழ்ந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களில் 10 பேர் நாட்டுக்காக உயிர் துறந்தனர். இந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 தேசிய காவலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சிறப்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை இந்நாளில் பாராட்டுவது வழக்கமாக உள்ளது. தேசிய காவலர் தினம் காவல்துறையினரின் தியாகம் மற்றும் வீரத்தை போற்றும் வகையில் நினைவுகூரப்படுகிறது.

SCROLL FOR NEXT