இன்று என்ன நாள்

அக். 20: இன்று என்ன? - பெண் குரல் மறைந்தது

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்த இவர் திருமணத்திற்கு பிறகுதான் எழுதத் தொடங்கினார். தன்னுடைய முதல் நாவலான ‘பெண் குரல்’ மூலம் பெண்களுக்கான உரிமை குரல் எழுப்பத் தொடங்கினார். சம்பல் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கொள்ளையர்கள் பற்றிய ‘முள்ளும் மலர்ந்தது’, தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களை நேரில் சந்தித்து எழுதிய ‘கரிப்பு மணிகள்’ ஆகிய இரு நாவல்களுக்காக இன்றும் போற்றப்படுகிறார். அவர்தான் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். தனது படைப்புகளுக்காக நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் சர்வதேச விருது, திரு.வி.க. விருது, கலைமகள் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். ‘வேருக்கு நீர்’ நாவலுக்கு சாகித்ய காடமி விருது வழங்கி மத்திய அரசு இவரை கவுரவித்தது. 2014-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி காலமானார்.

SCROLL FOR NEXT