இன்று என்ன நாள்

அக்.19: இன்று என்ன? - நோபல் புகழ் சுப்பிரமணியன் சந்திரசேகர்

செய்திப்பிரிவு

நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி பிறந்தார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர் இவர். குடும்பம் சென்னையில் குடியேறியதால் சகோதர, சகோதரிகளுடன் வீட்டிலேயே ஆரம்பக் கல்வி பயின்றார். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி அர்னால்டு சோமர்ஃபெல்டு இந்தியா வந்திருந்தார். அவரைச் சந்தித்து இயற்பியலில் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து சந்திரசேகர் தெரிந்துகொண்டார். தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து ‘நட்சத்திரங்களின் அமைப்பு’ நூலாக வெளியிட்டார். நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் ஏ.ஃபவுலருடன் இணைந்து இவருக்கு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT