சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதிக்கக் கூடியதாக இதய நோய் உள்ளது. இதய நோய் வருமுன் காக்க யோகா, தியானம், சத்தான உணவு, நற்சிந்தனைகள், சரியான தூக்கம் போன்றவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், இதய நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக இதய கூட்டமைப்பால் ஆண்டுதோறும் ஒரு குறிக்கோள் நிர்ணயிக்கப்படும். உலக அளவில் இதய நோய்களைத் தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் இதயத்தை பாதுகாப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே 2022-ம்ஆண்டுக்கான இதய தின கருப்பொருளாகும். “அனைவருக்கும் இதய ஆரோக்கியம்” என்ற முழக்கம் இந்நாளில் முன்வைக்கப்படுகிறது.