பாகிஸ்தானில் செப்.28 1907-ல் பகத்சிங் பிறந்தார். இளமையில் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டு விடுதலை வேட்கை கொண்டார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கு ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட சைமன் குழுவில் ஒரு இந்தியர்கூட இடம்பெறவில்லை. இதை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் லாலா லஜபதி ராய் ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். இதனால் கோபமடைந்த பகத்சிங், இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி உறுப்பினர்களுடன் இணைந்து ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸை கொலை செய்தார். லாகூர் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசியதால் பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. போராளி பகத்சிங் தனது 23 வயதில் வீர மரணம் அடைந்தார்.