பெண்களுக்கு வாக்குரிமை உட்பட அரசியலில் எவ்விதத்திலும் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட காலம் அது. இந்நிலையில் 1870 களிலிருந்து நியூசிலாந்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கேட் ஷெப்பர்டு என்பவரின் தலைமையில் வாக்குரிமை கோரி போராடினர்.
அதிலும்கேட் ஷெப்பர்டு நூற்றுக்கணக்கான மனுக்களை நியூசிலாந்து அரசாங்கத்திடம் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் பெண்களின் பெயரை இணைக்கும்படி வலியுறுத்தி வந்தார்.
இதன் விளைவாக 19 செப்டம்பர் 1893-ல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதாக ஆளுநர் கிளாஸ் கௌ பிரபு கையெழுத்திட்டார்.இதன் மூலம் உலக அளவில் பெண்களுக்கு முதன்முறையாக வாக்குரிமை கிடைக்கப் பெற்றது. இதே ஆண்டில் நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் எலிசபெத் என்ற பெண், முதன்முறையாக மேயர் பதவிக்குப் போட்டியிட்டார்.