இன்று என்ன நாள்

செப்.14: இன்று என்ன? - சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்

செய்திப்பிரிவு

உலகில் பல நாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

"வேற்றுமையில் ஒற்றுமை" என்பதை தாரக மந்திரமாகக் கொண்ட இந்தியாவிலும் பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். கலாச்சார பன்முகத்தன்மை நிறைந்த உலகில் நாடுகளிடையே கலாச்சார ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக மக்கள் அனைவரையும் அன்பு என்ற ஒரே குடையின்கீழ் கொண்டுவருவது, ஒருவருக்கொருவர் நேசம் பாராட்டுவது இத்தினத்தின் தலையாய நோக்கங்கள் ஆகும்.

நமது கலாச்சாரத்தை போலவே மற்ற கலாச்சாரமும் மதிப்புக்கு உரியதுதான் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் நாள் இது.

SCROLL FOR NEXT