கிழக்கு வங்காளத்தில் ஏழ்மையான பின்புலத்தில் பிறந்து இலக்கியத்தில் பேரார்வம் கொண்டதால் பின்னாளில் நவீன வங்காளஇலக்கியத்தின் முன்னோடியாக உருவெடுத்தவர் விபூதிபூஷண் பந்தோபாத்தியாய. இவர் செப்டம்பர் 12-ம் தேதி1894-ல் பிறந்தார்.
1928-ல் இவர் எழுதிய ‘பதேர் பாஞ்சலி,அபராஜிதோ’ நாவல்களை பின்னாளில் இயக்குநர் சத்யஜித்ரே திரைப்படமாக எடுத்தார். இவ்விரு திரைப்படங்களும் இன்றுவரை இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த படைப்புகளாக உலகப்புகழ் பெற்றுள்ளன. அதற்கு காரணம், அன்றைய சூழலில் யதார்த்தமாக மக்களின் எளிய வாழ்க்கை முறை, வங்காள கிராமப்புறங்களின் அழகியல் ஆகியவற்றை எளிய எழுத்து நடையில் எழுதும் பாணியை விபூதிபூஷண் பந்தோபாத்தியாய கையாண்டார்.