இன்று என்ன நாள்

செப்.05: இன்று என்ன? - டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் 

செய்திப்பிரிவு

நம் நாட்டின் 2-வது குடியரசு தலைவரும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ் ணன் பிறந்த தினம் இன்று (செப். 5). திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற கிராமத்தில் ஏழ்மை குடும்பத்தில் 5.9.1888 அன்று பிறந்தார். திருவள்ளூர் ‘கவுடி’ பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், தொடர்ந்து திருப்பதி லுத்தரன் மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்தார்.சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராகவும், கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவராக 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-ல் குடியரசுத் தலைவர் ஆனார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT