இன்று என்ன நாள்

செப்.02: இன்று என்ன? - உலகின் முதல் ஏடிஎம்

செய்திப்பிரிவு

பணப் பரிவர்த்தனைக்கு ஏடிஎம் அட்டையை அதிகம் பயன்படுத்தும் நிலை இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் நிலவி வருகிறது. ஆனால், உலக அளவில் முதன்முதலில் ஏடிஎம் பயன்பாடு 1969-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அன்றே வந்துவிட்டது.

நிலவில் மனிதன் கால்பதித்து சாதனை படைத்த ஆறு வாரங்கள் கழிந்த நிலையில், அட்டை ஒன்றை இயந்திரத்துக்குள் செருகி எடுத்தால் பணத்தை அந்த கருவி வெளியேற்றும் என்பதை உலகிற்கு காட்டியது அமெரிக்கா.

ஏடிஎம் (ATM) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சொல்லுக்கு முழு அர்த்தம் தானாக சொல்லும் இயந்திரம். முதல் ஏடிஎம் கருவிக்கு ‘‘டோகுடெல்லர்” என்று பெயரிடப்பட்டது. நியூ யார்க் நகரின் ராக்வில்லே சென்டர் பகுதியில் கெமிக்கல் வங்கியால் முதல் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது.

SCROLL FOR NEXT