இன்று என்ன நாள்

ஆக.23: இன்று என்ன? - அடிமை வணிக ஒழிப்பு தினம்

செய்திப்பிரிவு

அடிமை முறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும்.

இத்தகைய அடிமை வணிக முறை காலங்காலமாக ஆப்பிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நடந்துள்ளது. இத்தகைய அடிமை வணிக முறையை எதிர்த்து கரீபியன் தீவுகளில் ஒன்றான புனித டாமினிக் பகுதியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் நினைவாக யுனெஸ்கோ அமைப்பால் ஆகஸ்டு 23-ம் தேதி சர்வதேச அடிமை வணிக ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மக்களின் நினைவுகளிலும் அடிமை வணிகத்தின் துன்பத்தை எடுத்துரைக்கும் நோக்குடன் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT