இன்று என்ன நாள்

ஆக.10: இன்று என்ன? - உலக உயிரி எரிபொருள் தினம்

செய்திப்பிரிவு

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் போன்ற மரபு எரிபொருள்களுக்கான பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பசுமை எரிபொருளின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 10-ம் தேதி உலக உயிரி எரிபொருள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவில் 2015-ம்ஆண்டில் இருந்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உலக உயிரி எரிபொருள் தினத்தை கொண்டாடுகிறது.

இந்நாளில் உயிரி எரிசக்தித் துறையில் அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

ஜெர்மனி விஞ்ஞானியான ரூடல்வ் டீசல் 1983 ஆகஸ்டு 10-ம் தேதி டீசல் இயந்திரத்தில் கடலை எண்ணெய்யை பயன்படுத்தி வெற்றிகரமாக இயக்கினார். அதை நினைவுபடுத்தவே இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT