பிரதிநிதித்துவப் படம் 
இன்று என்ன நாள்

ஆக.2: இன்று என்ன? - ஆங்கிலோ - இந்தியர் தினம்

செய்திப்பிரிவு

இந்தியாவில் வாழ்ந்த ஐரோப்பிய ஆண்களுக்கும், இந்திய பெண்களுக்கும் இடையிலான திருமண உறவினால் பிறந்த சந்ததியினர் ஆங்கிலோ-இந்தியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் செல்வாக்குடன் வாழ்ந்த சிறுபான்மை சமூகம் இது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்திய மொழிகளை இரண்டாம் மொழியாகவும் அறிந்தவர்கள். கல்வி நிலையம், ரயில்வே துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரிகிறார்கள்.மேலும் ஆங்கில மொழி, மேற்கத்திய இசை மற்றும் நடனம் கற்றுத் தருவதை முதன்மையான தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய ஆங்கிலோ இந்திய மன்றத்தால் ஆகஸ்டு 2-ம் தேதி உலக ஆங்கிலோ-இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT