சோதனைக் குழாய் பிறப்பு முறையின் மூலம் கருத்தரிக்கப்பட்டு பிறந்த முதல் குழந்தை லூயிஸ் பிரவுன். ஐவிஎஃப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருத்தரிக்கப்பட்டு இவர் 1978 ஜூலை 25-ம் தேதி பிறந்தார்.
மருத்துவர்கள் ராபர்ட் எட்வர்ட்ஸ், பேட்ரிக் ஸ்டெப்டோ ஆகியோர் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் இது சாத்தியமானது. இவர்கள் இருவரில் சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறையின் ஆய்வை முழு மூச்சாக முன்னெடுத்தவர் பிரிட்டன் உயிரியல் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ்.
ஆகவேதான் சோதனைக் குழாய் வழி கருவூட்டலின் தந்தை என்றே இவர் அழைக்கப்படுகிறார். இவரது கண்டுபிடிப்புக்காக 2010-ம் ஆண்டு மருத்துவ நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.