தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றிய தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் 1876-ம் ஆண்டு ஜூலை 15-ல் பிறந்தார். வார இதழ்களில் ‘முருகவேள்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப் பற்றால், ‘வேதாச்சலம்’ என்ற தனது பெயரை ‘மறைமலை’ என்று மாற்றிக்கொண்டார். தனித்தமிழிலேயே பேச, எழுத உறுதி எடுத்த பிறகு, தான் ஏற்கெனவே எழுதிய நூல்களில் இருந்த பிறமொழிச் சொற்களுக்குப் பதிலாக தமிழ்ச் சொற்களை மாற்றி புதிய பதிப்புகளை வெளியிட்டார். உரையாடலில், மேடைப்பேச்சில், எழுத்தில் தூய தமிழ் நடையைக் கடைபிடித்தார். கோயில்கள், பள்ளிகளில் பட்டியலின மக்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என குரல் கொடுத்தார்.