பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள பஸ்தி சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து, மன்னராட்சியை 1789 ஜூலை 14 அன்று முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
அந்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்தனர். இந்நாளை நினைவுகூரும் வகையில் பிரான்ஸ் முழுவதும் அந்நாட்டு மக்கள் ஜூலை 13-ம் தேதி தீப்பந்த ஊர்வலம் நடத்துவதை இன்றும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், பிரெஞ்சின் காலனி ஆதிகத்துக்குள் 17-ம் நூற்றாண்டில் புதுச்சேரி வந்தது.
நெடுங்காலம் நீடித்த பிரெஞ்சு காலனி ஆதிக்கம் 1954-ல் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின் முடிவிற்கு வந்தது. இருப்பினும் பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது.