ஜனநாயக சீர்திருத்தங்களை பரப்பிய மனித உரிமை செயற்பாட்டாளர், சீன எழுத்தாளர் லியூ சியாபோ. "நோ எனிமீஸ்", "நோ ஹேட்ரெட்" இவரது முக்கியமான நூல்கள்.
இவரது எழுத்துக்கள் சீன அரசுக்கு எதிராக இருந்ததால் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே 2010-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த பரிசை அவரால் இறுதி காலம் வரை கையில் பெற முடியவில்லை. சிறையில் இருந்தபோது கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
உலகம் முழுவதிலும் நெருக்கடி தரப்பட்ட நிலையில் அவருக்கு அமெரிக்கா, ஜெர்மனியை சேர்ந்த புற்றுநோய் நிபுணர்கள் சிகிச்சை அளிக்க சீன அரசு அனுமதித்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 2017 ஜூலை 13-ம் தேதி தனது 61-வது வயதில் மறைந்தார்.