இன்று என்ன நாள்

ஜூலை 12: இன்று என்ன? - காந்தியடிகளை தூண்டிய அமெரிக்கரின் எழுத்து!

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கல்விக்குப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஹென்றி டேவிட் தோரோ.

வாசிப்பிலும் எழுதுவதிலும் தீவிர கவனம் செலுத்தி ‘வால்டன் ஆர் லைஃப் இன் தி வுட்ஸ்’ என்ற தலைப்பில் இலக்கிய உலகில் காலத்தை வென்ற படைப்பை இயற்றினார்.

வாக்குரிமைக்கான வரியை கட்ட மறுத்த அவரை அமெரிக்க அரசு சிறையில் அடைத்தது. சிறை அனுபவத்தை ‘சிவில் டிஸொபீடியன்ஸ்’ என்ற கட்டுரையாக 1849-ல் வடித்தார். தான் எழுதிய கட்டுரை அரை நூற்றாண்டு கழித்து பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கத்தை முன்னெடுக்க காந்தியடிகளைத் தூண்டும் என்று அன்று ஹென்றி டேவிட் தோரோ கற்பனை கூட செய்திருக்க மாட்டார். அத்தகைய ஹென்றி தோரோ பிறந்த தினம் இன்று.

SCROLL FOR NEXT