அமெரிக்க மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர் ஆனந்திபாய் கோபால் ஜோஷி. அவரது நினைவு தினம் இன்று. அன்றைய பம்பாய் மாகாணத்தை சேர்ந்த ஆனந்திபாய் 1865 மார்ச் 31-ம் தேதி கல்யாண் நகரில் பிறந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.
அதை கண்டு, இவரது கணவர் கோபால் ஜோஷி மருத்துவம் பயில பெரியளவில் ஊக்கப்படுத்தினார். அமெரிக்காவில் மருத்துவம் முடித்து அன்றைய கால கட்டத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு தூர்தர்ஷனில் தொடராக ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதேபோல் இவரது வாழ்க்கை குறித்த மராத்தி நாவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. இவர் காசநோயால் நோயால் பாதிக்கப்பட்டு 1887 பிப்ரவரி 26-ல் காலமானார்.