தமிழ்மொழி குறித்த பெருமைகளை உலகறிய செய்தவர்களில் வ.ஐ.சுப்ரமணியம் குறிப்பிடத்தக்கவர். இவர் நாகர்கோவில் அருகே உள்ள வடசேரியில் 1926 பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். உயர்கல்வியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகித்துள்ளார். தமிழில் பல்வேறு ஆய்வுகள் செய்ததுடன், பல நூல்களும் எழுதியுள்ளார்.
இதில் ‘புறநானூற்றுச் சொல்லடைவுகள்’ எனும் ஆய்வு நூல் குறிப்பிடத்தக்கது. மேலும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தார்.