உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன்.
இவரது பங்களிப்புகளில் மிக அத்தியாவசியமானது, நாம் ‘குண்டு பல்பு’ என்று சொல்லும் மின் விளக்கு. அப்போது உலகம் முழுவதும் ஒளி தேடி அலைந்து கொண்டிருந்த காலம். தீப்பந்தம், விளக்கு என சிறிது நேரம் கிடைக்க கூடிய ஒளியை நம்பிதான் இருந்தனர்.
ஆனால் அனைவருக்கும் பயன்படும் வகையில் நீண்ட நேரம் எரியக் கூடிய மின்விளக்கை 1878-ல்கண்டுபிடித்தார். பின்னர் 1879-ல் காப்புரிமைக்காக பதிவு செய்தார் எடிசன். சிறிது காலம் கழித்து 1880 ஜனவரி 27-ம் தேதி அவருக்கு காப்புரிமை கிடைத்தது.