இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களில் தனிச்சிறப்பு உடையவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் 1897 ஜனவரி 23-ம் தேதி அன்றைய வங்க மாகாணம் கட்டக்கில் பிறந்தார்.
இந்திய மக்கள் இவரை நேதாஜி (இந்துஸ்தானி மொழியில் ‘மதிப்புக்குரிய தலைவர்’) என்றே அழைத்தனர்.
இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றவர். பின் லண்டன் சென்று ஐசிஎஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். இந்திய விடுதலை மீது தீராத ஆர்வம் கொண்ட போஸ் 2-ம் உலகப் போரின் போது இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.
போஸின் வாழ்க்கை பல மர்மங்களால் சூழப்பட்டது. அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பது இன்று வரை மர்மம்தான்.