திராவிட மொழி வரலாற்றில் முக்கியமானவர் ராபர்ட் கால்டுவெல். இவர் கடந்த 1814 மே 7-ம் தேதி அயர்லாந்து நாட்டில் பிறந்தார்.
தனது 24 வயதில், ‘லண்டன் மிஷனரி சொசைட்டி’ எனும் கிறித்துவ மதக் குழுவுடன் இணைந்து மதத்தை உலக மக்களிடம் பரப்ப வேண்டும் என்பதற்காக கடந்த 1838 ஜனவரி 8-ம் தேதி சென்னைக்கு வந்தார்.
ஒப்பியல் மொழி பற்றிய ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் தமிழகத்தின் இடையன்குடி எனும் ஊரில் தனது மதப்பணியை மேற்கொண்ட அதே வேளையில் 50 ஆண்டு காலம் மொழி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.
இதன் விளைவாக ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதினார் கால்டுவெல். அந்த நூலில் திராவிட மொழிகளுக்கு மூலம் தமிழ்தான் என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டினார்.