இன்று என்ன நாள்

இன்று என்ன நாள்?- மகாகவி பாரதி பிறந்த தினம்

செய்திப்பிரிவு

மகாகவி என்று போற்றப்படும் பாரதியாரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவருடைய பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1882-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அப்போது திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ், ஆங்கிலம், இந்தி, சம்ஸ்கிருதம், வங்கமொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர்.

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் திறமை படைத்தவர். சமூகத்தில் நிலவிய பெரும்பாலான பிரச்சினைகளை, தனது வீரியம் மிக்க கவிதைகளால் சாடியவர்.

பாரதியாரின் நூல்கள் கடந்த 1949-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதான்.

SCROLL FOR NEXT