இன்று என்ன நாள்

இன்று என்ன நாள்?- ஆல்பிரட் நோபல் நினைவு தினம்

செய்திப்பிரிவு

சுவீடன் நாட்டில் 1833-ம் ஆண்டு அக்டோபர் 21-ம்தேதி பிறந்து, 1896-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி மறைந்தவர் ஆல்பிரட் நோபல். உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசை உருவாக்கியவர். இவர் டைனமைட்டை கண்டுபிடித்தார். ஆல்பிரட் நோபல் இளம் வயதில் வெடிபொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார். கடந்த 1863-ல் வெடி ஒன்றை கண்டுபிடித்தார். மேலும் 1865-ல் வெடிக்கும் தொப்பியையும் வடிவமைத்தார். தொழிற்சாலை விபத்தில் இவரது சகோதரர் எமில் மரணமடைந்தார். ஆனால், ஆல்பிரட் இறந்ததாக நினைத்து, ‘மரண வியாபாரி இறந்துவிட்டார்’ என்று செய்தி வெளியானது.

அதனால் மனம் உடைந்த ஆல்பிரட் நோபல் தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தை வைத்து நோபல் பரிசை நிறுவினார்.

SCROLL FOR NEXT