கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ 1926-ம் ஆண்டுஆகஸ்ட் 13ம் தேதி பிறந்து 2016-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி மறைந்தார். கியூபாவில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.
1959-ல் புரட்சி மூலம் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தினார். 1959 முதல் 1976 வரை கியூபா பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை அதிபராகவும் பதவி வகித்தார். கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார்.
உலகிலேயே 49 ஆண்டுகள் ஒரு நாட்டை ஆட்சி செய்தவர் என்ற பெருமை பிடல் காஸ்ட்ரோவை மட்டுமே சேரும். அமெரிக்க அரசு கியூபாவை தன் பக்கம் இழுக்க பார்த்தது. ஆனால், கியூபாவின் வளங்கள் எல்லாம் கியூபா மக்களுக்கே சொந்தம் என்று பிடல் உறுதியாக இருந்தார். கல்வி, மருத்துவம் இலவசம் என்று சமூக புரட்சியை ஏற்படுத்தினார்.