இன்று என்ன நாள்

இன்று என்ன தினம்?: மால்கம் ஆதிசேஷையா நினைவு தினம்

செய்திப்பிரிவு

வேலூரில் பிறந்தவர் மால்கம் ஆதிசேஷையா, ஊரிசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தவர். பின்னர் லண்டனில் படித்தார். சிறந்த கல்வியாளர், பொருளாதார மேதை.

கடந்த 1971-ம் ஆண்டு தமிழ்நாட்டில், தன் சொந்த செலவில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார். தன்னுடைய சொத்துகளை இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு எழுதி வைத்தார். தமிழ்நாடு கிராம விவசாயப் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம். இந்நிறுவனம் பின்னர் தேசிய அமைப்பாக மாற்றப்பட்டது.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் போன்ற பணிகளை செய்தார். யுனெஸ்கோ இயக்குநராகவும் பொறுப்பு வகித்தார். அவருடைய நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT