இன்று என்ன நாள்

இன்று என்ன?- ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்

செய்திப்பிரிவு

இந்தியா காலனி ஆட்சியில் இருந்த போது அரசர்கள், சாமானியர்கள் என பலரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைவராலும் ஜான்சி ராணி என்று அழைக்கப்படும் ராணி லட்சுமிபாய் முக்கியமானவர்.

இவர் 1828-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிறந்தார். இவரது பெற்றோரால் மணிகர்னிகா என்று அழைக்கப்பட்டார்.

லட்சுமிபாய், ஜான்சி பகுதியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கரை திருமணம் செய்துகொண்டார். பின் ஜான்சி பகுதிக்கு ராணியாகவும் முடிசூடினார். அதன் பின் நடந்த சுதந்திர போராட்டத்தில் ஜான்சி ராணியாக தலைமை ஏற்று ஆங்கிலேயர்களுடன் போர் தொடுத்தார்.

SCROLL FOR NEXT