இன்று என்ன நாள்

இன்று என்ன? - யோகா குரு கிருஷ்ணமாச்சார்யா

செய்திப்பிரிவு

நவீன யோகாவின் தந்தை என போற்றப்படுபவர் திருமலை கிருஷ்ணமாச்சார்யா. இவர் 1888-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி கர்நாடக மாநிலம் முச்சுகுண்டபுரம் எனும் இடத்தில் பிறந்தார்.

இவர் இந்தியாவின் நவீன யோகா குருவாகவும் ஆயுர்வேத மருத்துவராகவும் பரவலாக அறியப்பட்டார்.

‘இந்தியாவால் உலகுக்கு அளிப்பட்ட சிறந்த பரிசு யோகா’ என்று நம்பினார் கிருஷ்ணமாச்சார்யா. இவர் யோக சூத்திரம் மற்றும் யோக யஜ்னவல்கியாவின் அடிப்படையில் எல்லோருக்கும் யோகா கற்றுக் கொடுத்தார்.

இவரது பாணியில் உருவானதுதான் தற்போது அறியப்படும் வின்யசா க்ரமா யோகா எனும் வடிவம்.

SCROLL FOR NEXT