உலக கருணை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது 1998-ம் ஆண்டு கருணை இயக்கம் சார்பில் தொடங்கப்பட்டது. அதன்பின் பல நாடுகள் கருணை தினத்தை கடைபிடிக்கின்றன. இந்த அமைப்பு 1997-ம் ஆண்டு டோக்கியோவில் அமைக்கப்பட்டது. இந்த இயக்கமானது மதம், அரசியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு விளங்குகிறது.
கருணை என்பது அனைவரிடமும் அன்பு செலுத்துவது, எவ்வித பேதமுமின்றி சமரசமாக இருப்பதே கருணையின் வெளிப்பாடு. ஒவ்வொருவரும் சக மனிதனை சமமாகவும் கருணையோடும் அணுகவேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். ‘தொழு நோயாளிகள் என்றும் பாராமல் அனைவரையும் அரவனைத்து கருணையின் உருவமாக விளங்கும் அன்னை தெரசாவே நமக்கு உதாரணம்.