இன்று என்ன நாள்

இன்று என்ன நாள்?- பறவை மனிதனின்  பிறந்த தினம்

செய்திப்பிரிவு

இந்தியாவின் ‘பறவை மனிதன்’ என்று அழைக்கப்படுபவர் சலீம் அலி. இவர் 1892-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி பம்பாயில் பிறந்தார். விலங்கியல் துறையின் ஒரு பிரிவான பறவையியல் துறைக்கு உயிர் கொடுத்தவர். உள்ளபடியே பறவைகளை பற்றிய முறையான கணக்கெடுப்பை மேற்கொண்ட முதல் இந்தியர்.

இன்று பரவலாக நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பு, அவற்றின் பாதுகாப்புக்கு காரணமாக விளங்கியவர். தனது களப்பணி மூலம் பறவைகளை ஆய்வு செய்தார். அத்துடன் பறவைகளின் வாழ்க்கை, செயல்பாடுகள் குறித்து முழுமையாக புத்தகங்களில் எழுதியுள்ளார்.

‘இந்தியா, பாகிஸ்தான் நாட்டு பறவைகள் கையேடு’ மற்றும் சுயசரிதை நூலான ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ ஆகியவை இவரது முக்கிய நூல்கள். இவரது மகத்தான பணிக்காக 1958-ல் பத்ம பூஷண் விருது, 1976-ல் பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு வழங்கியது.

SCROLL FOR NEXT