நவம்பர் 8, 2016... அன்றைய தினத்தின் நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கணக்கில் வராத கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க இந்திய ரிசர்வ் வங்கியால் ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
முன்னறிவிப்பு இல்லாமல் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு மூலமாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்யும் நடவடிக்கையான இது முதல் முறை அல்ல.
கடந்த 1946-ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 1000, 10,000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. கடந்த 1954-ம் ஆண்டு 1000, 5000, 10,000 புதிய ரூபாய் நோட்டுகள் வெளிவந்தன. அதன்பின் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அரசு, இந்த நோட்டுகளை செல்லாதவையாக அறிவித்தது.