இன்று என்ன நாள்

இன்று என்ன நாள்?- பழம்பெரும்  அறிவியல் இதழ்  வெளியான நாள்

செய்திப்பிரிவு

இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளியாகும், ‘நேச்சர்’ எனும் அறிவியல் வார இதழ், நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. உயிரியல், இயற்பியல், வேதியியல், சுற்றுச்சூழலியல் என அறிவியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் இதில் வெளியிடப்படு கின்றன. சர்வதேச அளவில் வெளியாகும் இந்த இதழில், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உட்பட கல்விபுலம் சார்ந்த ஆய்வாளர்களின் கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

இதில் அறிவியல் கட்டுரைகள் மட்டுமல்லாமல் முக்கிய நடப்புகள், தொழில்கள் குறித்த செய்திகளும் வெளியாகின்றன. இந்த இதழ் முதன்முதலில் 1869-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி வெளியானது. இதை தொடங்கியவர் நோர்மன் லாக்யெர்.

SCROLL FOR NEXT