காலம் கடந்தும் தமிழ் இலக்கிய சூழலில் பேசப்பட்டு வரும் நாவல் பொன்னியின் செல்வன். சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவல் இன்று வரை எல்லோராலும் படிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் மக்களிடம் செல்வாக்கு பெற்ற இந்த நாவல் 1950-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கல்கி இதழில் வெளிவர தொடங்கியது. புத்தக வடிவில்பல பதிப்புகளாகவும் பல நாடக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.தற்போது சித்திரங்களோடு காமிக்ஸ் வடிவிலும் வெளியாகி உள்ளது.