இன்று என்ன நாள்

இன்று என்ன? - புர்காவில் புத்தகங்களை மறைத்து சென்றவர்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் அமைதிக்கான முதல் நோபல் பரிசு பெற்ற பெண் மலாலா யூசுப்சையி. 1997 ஜூலை 12-ம் தேதி பாகிஸ்தான் மிங்கோரா கிராமத்தில் பிறந்தார். இஸ்லாமிய வழக்கத்துக்கு மாறாக தன் முகத்தை மறைத்து பள்ளி செல்ல மாட்டேன் என்று முதல் எதிர்ப்பை தாயிடம் தெரிவித்தார்.

‘குல்மக்கா’ என்ற புனைப்பெயரில் வலைதளத்தில் எழுதினார். அன்றாடம் பள்ளிக்கு செல்லும்போது புத்தகங்களை புர்காவில் மறைத்து வைத்து சென்றார். 2012 அக்டோபர் 9-ம் தேதி பள்ளியில் இருந்து புறப்பட்ட பேருந்துக்குள் தலிபான்கள் நுழைந்து பெண் கல்விக்கு ஆதரவாக பேசிய மலாலாவை துப்பாக்கியால் சுட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பாகிஸ்தான் அரசாங்கமே மருத்துவமனையில் சேர்த்தது. சிகிச்சைக்கு பிறகு 15 வயதில் ஐ.நா.வில் 16 நிமிடம், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று பேசினார். 2014-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 2017 ஐ.நா. சபையின் அமைதிக்கான தூதுவராக பொறுப்பேற்றார்.

SCROLL FOR NEXT