இன்று என்ன நாள்

இன்று என்ன? - நோபல் பரிசு பெற்ற புத்த தலைவர்

செய்திப்பிரிவு

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா. திபெத்தில் டக்ஸ்டர் என்ற கிராமத்தில் 1935 ஜூலை 6-ம் தேதி பிறந்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். படிப்பு, தியானம், விளையாட்டு என இளமைப் பருவம் கழிந்தது.

25 வயதில் புத்த சமயத் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தத்துவம், துறவியர் ஒழுக்கம், விதிமுறைகள் குறித்த இவரது அறிவை 35 அறிஞர்கள் சோதித்தனர். அனைத்திலும் தேர்ச்சியடைந்து முனைவர் பட்டம் பெற்றார். திபெத் மக்கள் இவரை தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

1959-ல்திபெத் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் தஞ்சம் புகுந்தார். ‘ஆன்மிகத்தில் எங்கு பிழை என்று ஆதாரப்பூர்வமாக அறிவியல் நிரூபிக்கிறதோ அதை ஆன்மிகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பார்.

அமைதி, நல்லிணக்கம் தொடர்பாக உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பயிலரங்குகள், உரைகள், கூட்டங்கள் நடத்திய இவருக்கு 1989-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT