உலகின் வேகமான பெண், அமெரிக்காவின் டென்னஸியில் செயின்ட் பெத்லஹேமில் 1940 ஜூன் 23-ம் தேதி பிறந்தார் வில்மா குளோடியன் ருடால்ஃப்.
கறுப்பினக் குடும்பத்தில் 22 பேரில் 20-வது குழந்தையாக பிறந்தார். போலியோவால் பாதிக்கப்பட்டு 4 வயதில் நடக்க முடியாமல் போனது. குடும்ப வறுமை காரணமாக தரமான சிகிச்சைகூட கிடைக்கவில்லை. தாயின் முயற்சியால் 12 வயதில் எந்த செயற்கை சாதனமும் இல்லாமல் நடந்தாள். 1956 மெல்பர்ன் ஒலிம்பிக்கில் மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 1960-ல் திருமணமாகி, குழந்தை இருந்தது. அப்போது ரோம் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் 2 தங்கம் வென்றார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின்போது, கணுக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியைப் பொருட்படுத்தாமல் ஓடி ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்றார். தன்னுடைய பெயரில் அறக்கட்டளை தொடங்கி, குழந்தைகள் மேம்பாட்டுக்கு உதவிகளை வழங்கினார். கறுப்பின மக்களுக்கான சிவில் உரிமைகள், மகளிர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். மக்கள் அனைவரும் இவரை கருப்பு முத்து என்று அழைத்தனர்.